சென்னை: பாலியல் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுஷில்ஹரி பள்ளி ஆசிரியர்  சிவசங்கர் பாபாவின் 8வது வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சுசில் ஹரி பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர்மீது 8 பாலியல் வழக்குகள் போடப்பட்டு உள்ளது. இவரது ஜாமின் மனுமீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், சிவசங்கர் பாபாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க அறிவுறுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 7 வழக்குகளில் நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது, 8 வழக்கிலும் ஜாமின் விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது, இந்த நிலையில், சிவசங்கர் பாபா வெளியே வந்தால் சாட்சியங்களை கலைத்து விடுவார் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி,  சிவசங்கர் பாபாவுக்கு,  ஜாமீன் அளித்துள்ளது.

அதன்படி, சிவசங்கர்பாபா தனது  பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், விசாரனைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும்  விசாரணை அதிகாரிக்கு தெரிவிக்காமல் தமிழகத்தை விட்டு வெளியில் செல்லக் கூடாது என்றும் தெரிவிவிக்கப்பட்டுள்ளது.

சிவசங்கர்பாபா மீதான அனைத்து வழக்குகளிலும் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டு உள்ளதால், அவர் நாளை சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.