டில்லி
விவசாயத்துக்கு தேவையான முக்கிய கூட்டு உரங்கள் பழைய விலைக்கே விற்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
பாஜக அறிவித்துள்ள வேளாண் சட்டங்கள், மற்றும் பயிர்க்கடன் தொல்லை ஆகியவற்றால் விவசாயிகள் மிகவும் துயரடைந்துள்ளனர். இந்நிலையில் உர உற்பத்தி நிறுவனங்கள் பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் முக்கிய கூட்டு உரவங்கள் விலையைல் 60% உயர்த்தின. இதற்கு நாடெங்கும் பல்வேறு கட்சியினர் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
இதையொட்டி மத்திய அரசு உர உற்பத்தி நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. அந்த பேச்சு வார்த்தையில் மத்திய அரசு இந்த விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கு பதில் விலை உயர்வை தற்காலிகாலிமாக நிறுத்தி வைக்க உர உற்பத்தி நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளன.
இதையொட்டி பேச்சு வார்த்தையில் கலந்துக் கொண்ட மத்திய உரத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது டிவிட்டரில், ” உரங்களின் விலை உயர்வை தற்போது, நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதையொட்டி விவசாயிகளுக்கு பழைய விலைக்கே உரங்கள் விற்பனை செய்யப்பட உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.