சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில், 200 எண்ணிக்கையிலான புதிய பேருந்து நிழற்குடைகள் சுமார் ரூபாய் 30 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட இருப்பதாகவும் மாநகர பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மேயர்ஆர்.பிரியா தலைமையில் மாமன்றக் கூட்டரங்கில் மார்ச் 19ந்தேதி அன்று தாக்கல் செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், துணை மேயர் .மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் ஜெ. குமரகுருபரன், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பட்ஜெட்டில், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் அகழ்ந்தெடுக்கும் பணி மூலம் மீட்டெடுத்த நிலத்தில், இரண்டு ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில், 2 எண்ணிக்கையில், ஒவ்வொன்றும் தலா 50 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட காற்று புகும் வகையில் பதனம் செய்யும் உரம் தயாரிக்கும் கூடம் ரூபாய் 14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குப்பை கொட்டும் வளாகத்தில் நெகிழிகளை கொட்டுவதைத் தவிர்க்க ஏற்கனவே, ஐந்து மண்டலங்களில் தலா 10 மெட்ரிக் டன் திறன் கொண்ட நெகிழி சிப்பமாக்கல் மையங்கள் இயங்கி வருகின்றன. மேலும், இப்பணிகள் இதர 10 மண்டலங்களில் (மண்டலம்1,3,4,8,9,10,11,12,13 மற்றும் 15) தலா 10 மெட்ரிக் டன் திறன் கொண்ட நெகிழி சிப்பமாக்கல் மையங்கள் ரூபாய் 22.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
மேம்பாலங்கள் மற்றும் இரயில்வே மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியினை உகந்த முறையில் அழகுபடுத்திட ரூபாய் 42 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
நீத்தார் உடல் பாதுகாப்பு மையம் தனியார் பங்களிப்புடன் (PPP-Mode) வேலங்காடு மயான பூமியில் தற்போது செயல்பட்டு வருவதைப் போன்று, வடக்கு வட்டாரத்தில் மூலக்கொத்தளம் மயான பூமியிலும் மற்றும் தெற்கு வட்டாரத்தில் பெசன்ட் நகர் மயான பூமியிலும் PPP-Mode முறையில் செயல்படுத்தப்படும்.
சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும், 52 சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, மின்னாக்கி ரூபாய் 4.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 18 இடங்களில் உள்ள வாகனப் போக்குவரத்து சுரங்கப்பாதைகளில், மழைநீரை உடனுக்குடன் அகற்றுவதற்கு, புதிய டீசல் மோட்டார்கள், மின்மோட்டார்கள், மின்னாக்கி அமைக்கப்படும். மேலும், சுரங்கப்பாதைகளில் வர்ணங்கள் பூசப்பட்டு வண்ணமிகு வரைபடங்கள் வரைந்து மின் விளக்குகளால் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூபாய் 14.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஈக்காட்டுத்தாங்கல், மேற்கு சைதாப்பேட்டை மற்றும் கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை ஆகிய இடங்களில் ஆஸ்பெஸ்டாஸ் கூரையாக அமைந்துள்ள பேருந்து நிறுத்தங்களை தரம் உயர்த்தி இழுவிசை கூரையாக மேம்படுத்திட ரூபாய் 4.47 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி (மண்டலம்-2 வார்டு 21), IOCL (மண்டலம் 4 வார்டு 38), டோல்கேட் (மண்டலம் 4 வார்டு 39) மற்றும் சாலிகிராமம் (மண்டலம் 10 வார்டு 128) ஆகிய நான்கு இடங்களில் அமைந்துள்ள பேருந்து முனையங்கள் ரூபாய் 16.00 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக விளையாட்டுத்திடல்களை மேம்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். எனவே பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட 150 விளையாட்டுத் திடல்களில், ரூபாய் 20.00 கோடி மதிப்பீட்டில் புதிய விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படும்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெரிய அளிவிலான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த 171 எண்ணிக்கையிலான விளையாட்டு திடல்களில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பாதுகாவலர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இதற்கென ரூபாய் 5.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பூங்காக்களில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் 70 எண்ணிக்கையிலான பூங்காக்களில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில், பூங்காவின் ஒரு பகுதியில் கூரை அமைத்து இருக்கை வசதியுடன் கூடிய புத்தகம் வாசிப்பு மண்டலங்கள் ரூபாய் 2.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள சாலை மைய தடுப்புகள் மற்றும் சாலை மைய தீவுத் திட்டுகளை அழகுபடுத்த, முதற்கட்டமாக 25 கிலோ மீட்டர் நீளத்திற்கு மண் மற்றும் உரம் இடுதல் மற்றும் பல்வேறு வகையான அலங்காரப் பூச்செடிகள் நடவு செய்து அதனைப் பாதுகாக்கும் வகையில், துருப்பிடிக்காத இரும்பிலான கைப்பிடி அமைக்க ரூபாய் 18.00 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 300 பூங்காக்களை பொது மக்கள் அதிகம் பயன்படுத்திடும் வகையில், பூங்காக்கள் பழுது பார்க்கும் பணிகளுக்காகவும் மற்றும் மேம்படுத்தும் பணிகளுக்காகவும் ரூபாய் 43 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கீழ்காணும் 10 பெரிய பூங்காக்களைத் தேர்வு செய்து அனைத்து வகையான பார்வையாளர்களும், முக்கியமாக பெற்றோருடன் வரும் சிறப்பு குழந்தைகள் உபயோகிக்கும் வகையிலான உபகரணங்கள் உள்ளடக்கிய சிறப்பு அம்சங்கள் கொண்ட பூங்காக்களாக மேம்படுத்திடரூபாய் 3.00 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
இறகுப் பந்து உள் விளையாட்டு அரங்கம்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வடசென்னைப் பகுதி வாழ் இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் மண்டலம்-2, வார்டு 16ல் ஆண்டார் குப்பம் – ஏலந்தனுார், சடையன்குப்பம் – பர்மா நகர் ஆகிய இரண்டு இடங்களில் புதியதாக இறகுப் பந்து உள் விளையாட்டரங்கம் அமைக்க ரூபாய் 2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை மாநகராட்சி நுழைவாயில்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் 10 இடங்களைத் தேர்வு செய்து, அங்கு மின் ஒளியுடன் கூடிய செயற்கை நீருற்றுகள் ரூபாய் 5.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
சென்னை மாநகராட்சி பூங்காக்களுக்கு நடைபயிற்சி மற்றும் பொழுதுபோக்கிற்காக வரும் பொதுமக்கள், தங்கள் களைப்பினைப் போக்கி புத்துணர்வு பெறும் வகையில், பூங்காக்களில் சுய உதவிக் குழுக்களால் தரமான மற்றும் சுகாதாரமான உணவு மையங்கள் அமைக்கப்படும்.
சென்னையில் ரூ. 30 கோடி செலவில் 200 புதிய நிழற்குடைகள்
பெருநகர சென்னை மாநகராட்சியில், 200 எண்ணிக்கையிலான புதிய பேருந்து நிழற்குடைகள் சுமார் ரூபாய் 30 கோடி செலவில் அமைக்கப்படும் என்று மேயர் ஆர்.பிரியா தெரிவித்து உள்ளார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள சாலை மைய தடுப்புகள் மற்றும் சாலை மைய தீவுத் திட்டுகளை அழகுபடுத்த, முதற்கட்டமாக 25 கிலோ மீட்டர் நீளத்திற்கு மண் மற்றும் உரம் இடுதல் மற்றும் பல்வேறு வகையான அலங்காரப் பூச்செடிகள் நடவு செய்து அதனைப் பாதுகாக்கும் வகையில், துருப்பிடிக்காத இரும்பிலான கைப்பிடி அமைக்க ரூபாய் 18.00 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 300 பூங்காக்களை பொது மக்கள் அதிகம் பயன்படுத்திடும் வகையில், பூங்காக்கள் பழுது பார்க்கும் பணிகளுக்காகவும் மற்றும் மேம்படுத்தும் பணிகளுக்காகவும் ரூபாய் 43.00 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கீழ்காணும் 10 பெரிய பூங்காக்களைத் தேர்வு செய்து அனைத்து வகையான பார்வையாளர்களும், முக்கியமாக பெற்றோருடன் வரும் சிறப்பு குழந்தைகள் உபயோகிக்கும் வகையிலான உபகரணங்கள் உள்ளடக்கிய சிறப்பு அம்சங்கள் கொண்ட பூங்காக்களாக மேம்படுத்திடரூபாய் 3.00 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை மாநகராட்சி பூங்காக்களுக்கு நடைபயிற்சி மற்றும் பொழுதுபோக்கிற்காக வரும் பொதுமக்கள், தங்கள் களைப்பினைப் போக்கி புத்துணர்வு பெறும் வகையில், பூங்காக்களில் சுய உதவிக் குழுக்களால் தரமான மற்றும் சுகாதாரமான உணவு மையங்கள் அமைக்கப்படும்.