சென்னை:
ருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க பதிவு இன்றுடன் நிறைவு பெற்றது.

இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ படிப்புகளுக்கு, 2022 – 23ம் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்கான ‘ஆன்லைன்’ விண்ணப்ப பதிவு, செப்., 12ல் துவங்கியது.’நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பித்து வருகின்றனர்.

விண்ணப்பப் பதிவு அக்., 3ல் நிறைவடைய இருந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்று மாலை 5:00 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இதுவரை 35ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இன்று மாலையுடன் விண்ணப்பப் பதிவு முடிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, கவுன்சிலிங் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.