சென்னை

சென்னையில் நாளை முதல் 4 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு விதிகளில் சென்னை மாநகராட்சி திருத்தம் செய்துள்ளது.

கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி நாளை முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவித்தது.  அப்போது மருத்துவமனைகள்,ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட மருத்துவ சேவைகளுக்கு தடை இல்லை என அறிவிக்கபட்ட்து.  மேலும் காய்கறிகள், மற்றும் பழங்களை மட்டும் விற்பனை செய்யும் கடைகளும் நடமாடும் காயகறிக்கடைகளும் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது சென்னை மாநகராட்சி இந்த விதிகளில் திருத்தத்தை அறிவித்துள்ளது.

அதன்படி,

“நான்கு நாட்கள் முழு ஊரடங்கு குறித்த அறிவிப்பில் ஒரு சிறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

காய்கறிகள், பழங்கள் விற்கும் கடைகள் உள்ளிட்ட எந்த கடைகளும் திறந்திருக்க அனுமதி இல்லை.

தள்ளுவண்டி மற்றும் வேன்கள் மூலம் மட்டும் காய்கறிகள், பழங்கள் விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தம் உடனடியாக அமலுக்கு வருகிறது.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களுக்குச் சென்னை மாநகராட்சி வருந்துகிறது”

என அறிவிக்கப்பட்டுள்ளது.