வைரமுத்துக்கு எதிராக சிறுவர் சிறுமியரின் ஆபாச பேச்சு….நித்யானந்தா மீது போலீசில் புகார்

Must read

பெங்களூரு:

சிறுவர் சிறுமியர்கள் மூலம் வைரமுத்துக்கு எதிரான ஆபாச பேச்சுக்கள் அடங்கிய வீடியோவை வெளியிடும் நித்யானந்தா மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஆண்டாள் குறித்து கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்துவுக்கு எதிர்ப்புகள் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்த வகையில் கர்நாடகாவை சேர்ந்த நிதியானந்தாவும், அவரது சீடர்களும் வைரமுத்துக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதன் உச்சகட்டமாக நித்யானந்தா ஆஸ்ரமத்தை சேர்ந்த சிறுவர் சிறுமியர் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி வைரமுத்துவை திட்டும் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் வைரமுத்துக்கு எதிரான ஆபாச கேள்விகளை கேட்கின்றனர். அவரையும், அவரது கு டும்பத்தாரையும் ஆபாச வார்த்தைகளால் இழிவுபடுத்தி பேசும் வீடியோக்களும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது. சிறுமிகளை குறிவைத்து ஆபாச கமென்ட்களும் இதில் பதிவிடப்ப டுகிறது. இதற்கு பல தரப்புகளில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளது. இது குறித்து கர்நாடகாவை சேர்ந்த சமூக நல ஆர்வலர் பியூஷ் மனுஷ் என்பவர் போலீசில் புகார் செய்துள்ளார். சிறுவர்களுக்கான பாலியல் வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் இது குற்றம் என்று அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா ஆஸ்ரமம் கர்நாடகா மாநிலம் ராமனகரா மாவட்டம் பிடாடியில் அமைந்துள்ளது. நித்யானந்தா மற்றும் ஆஸ்ரமம் மீதும் மத அமைப்பை தவறாக பயன்படுத்தி சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பாஜக.வினர் கூறுகையில், ‘‘நித்யானந்தாவின் செயல்பாட்டால் பாஜக.வுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இந்து மதத்தின் மீது தவறான எண்ணம் உருவாகும் வகையில் அவர்கள் செயல்ப டுகிறார்கள். சில சுயநல ஆதாயத்திற்காக அவர்கள் இத்தகைய வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இது மதத்தின் மீது தவறாக எதிரொலிக்கும்’’ என்றனர்.

மற்றொரு பாஜக தலைவர் கூறுகையில், ‘‘ நித்யானந்தாவுடன் இணைந்து நாங்கள் எதுவும் செய்ய விரும்பவில்லை. அவரிடம் இருந்து விலகி தான் இருக்கிறோம்’’ என்றார்.

மேலும், வைரமுத்து பிரச்னையை வைத்து பாஜக மற்றும் இந்துத்வா அமைப்புகளிடம் அரசியல் ஆதாயம் தேட நித்யானந்தா முயற்சி செய்கிறார் என்பதை பாஜக தலைவர் ஒப்புக்கொண்டுள்ளனர். நித்யானந்தா மற்றும் அவரது ஆஸ்ரம செயல்பாடுகளை எழுத்தாளர்கள், நடிகர்கள் மற்றும் பலர் வெளிப்படையாகவே கண்டித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article