
சாதிப் பெயரைச் சொல்லி இழிவாக பேசியதால் மீரா மிதுன் மீது காவல் நிலையத்தில் அடுக்கடுக்கான புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகை மீரா மிதுன் சில தினங்களுக்கு முன் வீடியோ ஒன்றை யூட்யூப்பில் பதிவிட்டார். அதில், குறிப்பிட்ட சமூகப் பிரிவினரை குறிவைத்து அந்தப் பிரிவைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர், நடிகைகளை குறித்து கொச்சையாகப் பேசியும், அவர்களை திரைத்துறையில் இருந்து அகற்றுவது அவசியம் எனவும் பேசியிருந்தார்.
மேலும், அப்பிரிவைச் சேர்ந்த அனைவரும் குற்றப் பின்னணி உடையவர்களாக இருப்பதால்தான் அவர்களை அனைவரும் தூற்றுகின்றனர் எனவும் அவர் பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இப்பதிவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் கிளம்பிய நிலையில் புரட்சி பாரதம் கட்சியினர் சார்பில் நடிகை மீரா மிதுன் மீது சென்னை, திருவள்ளூர் மற்றும் மதுரை ஆகிய 3 மாவட்டங்களிலும் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சாதி வன்கொடுமைப் பிரிவின் கீழும், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதற்காக IT பிரிவின் கீழும் நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாதி வன்கொடுமைப் பிரிவின் கீழும், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதற்காக IT பிரிவின் கீழும் நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]