சென்னை: மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டியை 5 விழுக்காடாகக் குறைத்திட வேண்டும், மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் சவுகானுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழ்நாட்டில் மாங்கனி விலை வீழ்ச்சியை ஈடுசெய்ய சந்தைத் தலையீட்டுத் திட்டத்தை (Market Intervention Scheme) செயல்படுத்தி விவசாயிகளுக்கு உரிய தொகையை வழங்கிட அனுமதி கேட்டும், மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டியை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைத்திட வேண்டும் என மத்திய வேளாண்மை உழவர் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ்சிங் சவுகானுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “மாம்பழ விவசாயிகளின் துயரைப் போக்கிட, உற்பத்தியாகியுள்ள மாம்பழங்களை உரிய விலையில் மத்தியக் கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்திட உத்தரவிட வேண்டும். மாம்பழச் சாறு தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்சம் சேர்க்க வேண்டிய மாம்பழக் கூழ் அளவு உள்ளிட்ட FSSAI தரக்கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்திட வழிகாட்டுதல்கள் வழங்கிட வேண்டும். மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டியை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைத்திட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு 50:50 பகிர்வுமுறையில் மாநில அரசும் மத்திய அரசும் இழப்பீடு வழங்கிட ஏதுவாகத் தமிழ்நாட்டில் PM-AASHA சந்தைத் தலையீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.” என்று வலியுறுத்தி உள்ளார்.

[youtube-feed feed=1]