ல்கான்

காராஷ்டிர மாநிலத்தில் நடந்த புஷ்பக் ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அரசு நிவாணம்  அறிவித்துள்ளது.

நேற்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து புறப்பட்ட புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள பட்னேரா ரெயில் நிலையம் அருகே ரெயில் நேற்று மாலை வந்தபோது, பி4 ஏசி பெட்டியின் சக்கரங்களில் இருந்து தீப்பொறி பறந்தது.  எனவே உடனடியாக அங்கிருந்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

பயணிகள் பலர் அருகில் உள்ள தண்டவாளத்தில் குதித்தபோது அந்த தண்டவாளத்தில் பெங்களூருவில் இருந்து டெல்லி நோக்கி செல்லும் கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவேகமாக வந்துகொண்டிருந்தது.   இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பயணிகள், தண்டவாளத்தை கடந்துவிட முயன்றனர். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ரெயில், தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது மோதிச் சென்றது. வி இந்த விபத்தில் சிக்கியவர்களில் சிலரது உடல்கள் சிதறி நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டன. 13 பேர்  இந்த விபத்தில் உயிரிழந்து 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மகாராஷ்டிர அமைசர்  அமைச்சர் கிரிஷ் மகாஜன் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார்..     காவ் மாவட்ட கலெக்டரும் அங்கு விரைந்தார். மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. தண்டவாளத்தில் துண்டிக்கப்பட்ட தலைகளும், உடல்களும் சிதறி கிடந்த காட்சி நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. புஷ்பக் ரெயில் பயணிகள் மற்றும் அங்கு கூடிய மக்கள், அந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்,

“காயம் அடைந்த பயணிகளுக்கு சிகிச்சை அளிக்க தயாராக இருக்குமாறு அப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு மாநில அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்”

என அறிவித்துள்ளார்