வாஷிங்டன்

ந்து தேசிய கொள்கைகளை பாஜக வலியுறுத்தினால் தேர்தலுக்கு முன் இந்தியாவில் இனக்கலவரங்கள் ஏற்படும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியதாக நியூஸ் 18 ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

வரும் 2019ல் நடைபெற உள்ள பொதுத் தேர்தலை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும் கூர்ந்து கவனித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா போன்ற வளரும் நாடுகள் பலவும் தேர்தல் குறித்து பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. அமெரிக்காவில் நிலவி வரும் கருத்து குறித்து இந்திய செய்தி ஊடகமான நியூஸ் 18 செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் காணப்படுவதாவது :

வரும் 2019 ஆம் வருட பொதுத் தேர்தல் குறித்து அமெரிக்க செனட் சபையின் தரப்பில் அதன் உறுப்பினரும் அமெரிக்க தேசிய புலனாய்வு துறையின் இயக்குநருமான டான் கோட்ஸ் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “இந்தியாவை ஆண்டு வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் மோடி மீது இந்து மத ஆதரவாளர் என்னும் குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இதனால் பாஜக ஆளும் ஒரு சில மாநிலங்களில் இனக் கலவர பயத்தை உண்டாக்கியது.

இஸ்லாமியர்கள் மீது நடைபெறும் இந்து சக்திகளின் தாக்குதலால் இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதிகள் அதிகரித்துள்ளனர். வரும் மே மாதத்துடன் இந்த அரசின் ஆயுட்காலம் முடிவாடைவதால் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் தனது இந்துக்கள் ஆதரவு கொள்கைகளை நாட்டில் செயல்படுத்த பாஜக எண்ணி உள்ளது.

ஏற்கனவே இந்திய எல்லைகளில் பயங்கர வாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் பாஜக இந்து ஆதர்வு கொள்கைகளை செயல்படுத்த முயன்றால் நாட்டில் இனக் கலவரம் ஏற்படும். இது எதிரி நாடுகளுக்கு நன்மையாக அமையும். அநேகமாக தேர்தல் முடியும் வரை பாகிஸ்தானுடன் இந்தியா நட்புறவு பாராட்டாது எனவே தோன்றுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நியுஸ் 18 வெளியிட்டுள்ள அந்த செய்தியில்குறிப்பிடப்பட்டுள்ளது.