டெல்லி: மேற்குவங்க மாநநிலத்தில் கொரோனா சமூக பரவல் நிலை அடைந்துள்ளதாக மத்தியசுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஒப்புதல் தெரிவித்து உள்ளார்.  மேலும் கேரளாவில் மீண்டும் கொரோனா பரவலுக்கு காரணமாக ஓணம் பண்டிகையே காரணம் என்றும் தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா பரவல் என்ற நிலையை அடைந்துள்ளது உறுதியாகி உள்ளது.

மத்திய சுகாதாரத்துறைஅமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன்,  வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை ‘சண்டே சம்வாத்’  என்ற நிகழ்ச்சி மூலம் சமூக வலைதளத்தில் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் தெரிவித்து வருகிறார். அதன்படி நேற்று (அக்டோபர் 18) நடைபெற்ற 6வது சண்டே சம்வாத்   நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பியவர்களுக்கு பதில் அளித்தார்.

கொவிட் -19 தொடர்பாகக் கேட்கப்பட்ட பல  கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.  தனது சாந்தினிசவுக் தொகுதி மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க தனது செல்போன் எண்ஐ அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் பகிர்ந்துக் கொண்டார்.

வரவிருக்கும் திருவிழாக் காலங்களில், மக்கள் வெளியே செல்லாமல், வீட்டிலேயே கொண்டாடும்படியும், கூட்டத்தை தவிர்த்து, மத்திய அரசின் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

கொவிட் 19க்கு எதிராக போராடுவதுதான் முக்கியமான நடவடிக்கை என மக்களுக்கு நினைவூட்டிய மத்திய அமைச்சர், தொற்று பரவலைக் குறைப்பதும், உயிரிழப்பைத் தடுப்பதும் தான் தனது முக்கியமான பணி என்று கூறினார்.

கொவிட் தொற்று மேலும் பரவாமல் தடுக்க, அடுத்த 2 மாதங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்த மக்கள் இயக்க பிரசாரத்தில் மக்கள் இணைய வேண்டும் என டாக்டர் ஹர்ஷ்வர்தன் வலியுறுத்தினார்.


மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் சமூக பரவலாமாக மாறி உள்ளது என்பதை  ஒப்புக் கொண்டதுடன், இந்தியாவின் மேலும் சில மாநிலங்களில் கொரோனா பரவல் சமூக பரவல் நிலையை அடைந்து இருப்பதாக தெரிவித்தார்.
குறிப்பாக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சமூக பரவல் நிலையை அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். எனினும் நாடு முழுவதும் சமூக பரவல் நிலையை அடையவில்லை எனவும், சில மாநிலங்களில் இருக்கும் குறிப்பிட்ட மாவட்டங்களில்தான் சமூக பரவல் நிலையை அடைந்துள்ளது என  தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா வைரசில் மரபியல் ரீதியில் மாற்றம் ஏற்பட்டதாக கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறிய அவர், செய்தித்தாள்கள் மூலம் கொரோனா பரவாது என்றும், அறிவியல் ரீதியில் செய்தித்தாள்கள் மூலம் கொரோனா பரவும் என்பது நிரூபிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்றும், இதுவே அந்த மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம். ஓணம் கொண்டாட்டத்துக்கான விலையை இப்போது அது கொடுத்து வருகிறது. இதில் இருந்து மற்ற மாநிலங்கள் பாடம் கற்க வேண்டும்,’’ என்றார்.

, ‘‘தனது நாட்டில் கொரோனா பரவும் முன்பாகவே, உலகின் பல்வேறு நாடுகளில் அது பரவி இருந்தது என்று சீனா கூறியிருப்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. அந்நாட்டின் வுகான் நகரில் கொரோனா பரவியபோது, உலகின் வேறு எந்த நாட்டிலும் இந்த வைரஸ் இருப்பதாக கூறப்படவில்லை,’’ என்றும்,  சீனாவின் பிரபல குயிங்டோ துறைமுகத்தில் இறக்குமதியான குளிரூட்டப்பட்ட உணவுப் பொட்டலங் களில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பாக்கெட் மீன் இறைச்சியில் இதை கண்டறிந்துள்ளனர். இந்த உணவுப்பொருட்கள் எந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இதன்மூலம், ‘பாக்கெட் உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள், இறைச்சிகளை வாங்குவதில் அதிகம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தி உள்ளது’ என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அவ்வாறு  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கூறியுள்ளார்.