
காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சிந்து தங்கம் வென்று சாதனை படைத்தார். தீபக் குமார் வெண்கலம் வென்றார்.
காமன் வெல்த் துப்பாக்கி சுடும் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 10எம் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சிந்து 626.2 பாய்ன்ட் எடுத்து தங்கப்பதக்கம் வென்றார்.
இது சர்வதேச போட்டிகளில் அவர் பெற்றுள்ள இரண்டாவது தங்கப்பதக்கம். மற்றொரு போட்டியில் இந்திய வீரர் தீபக் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார்.
அதே நிகழ்வில் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற ககன் நரங் நான்காவது இடத்தையும், ரவிக்குமார் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel