லக்னோ:

.பி. மாநிலத்தை சேர்ந்த  இந்திய பளுதுாக்குதல் வீராங்கனை பூனம் யாதவ், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்ற  காமன்வெல்த் விளையாட்டின் பளு துாக்குதல் போட்டியில் பங்கேற்று 22 வயதான இளம் வீராங்கனை தங்கம் வென்றார்.

தற்போது, இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் வரும் ஆகஸ்டு மாதம்  நடக்கவுள்ள ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் விதமாக பாட்டியாலா பயிற்சி முகாமில் தயாராகி வருகிறார்.

இந்நிலையில், பயிற்சி முகாமில் இருந்து பூனம் யாரிடமும் தகவல் சொல்லாமல் வெளியே சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

ஏற்கனவே இதுபோல ஒருமுறை பூனம் யாதவ் தவறு செய்துள்ளதால், தற்போது சஸ்பெண்டு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், மீண்டும் முகாமிற்கு திரும்ப வேண்டும் என்றால், அவரது சொந்த செலவில், தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையத்தில் சோதனை செய்து கொண்ட பிறகு தான் பயிற்சிக்கு வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.