சத்யா சிவா இயக்கத்தில் சசிகுமார், ஹரிப்ரியா ஜோடியாக நடிக்கும் படம், காமன் மேன். இப்படத்தில் விக்ராந்த் வில்லனாக நடித்துள்ளார்.

இது குறித்து இயக்குநர் சத்யா சிவா, “விக்ராந்த் இதில் வழக்கமான வில்லன் இல்லை. சாத்தன் போன்ற கொடூர குணம் படைத்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்” என்றார்.

இன்று படத்திலிருந்து விக்ராந்தின் சிறு வீடியோ காட்சி வெளியிடப்பட்டது. அவரது தோற்றம் சாதாரணமாக இருந்தாலும், கையில் அரிவாளுடன் ஆக்ரோசமாக நடந்து வந்து வெட்டும் காட்சி கதிகலங்க வைக்கிறது.

அவரது அனைத்து முயற்சிகளும் சாத்தானை (நரகத்தின் ராஜா) நினைவூட்டும்.

இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் .செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் டி.டி.ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.

[youtube-feed feed=1]