சென்னை,
த்திய அரசு கொண்டு வர இருக்கும் பொது சிவில் சட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்புவின் கருத்துக்கு தமிழக பாரதியஜனதா தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
இன்று நடைபெற்ற சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் நிகழச்சியில் கலந்துகொண்டு, அவரது  சிலைக்கு தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்தார்.
அப்போது, அவரிடம், பொதுசிவில் சட்டம் குறித்த, குஷ்புவின் கருத்து பற்றி கேள்வி எழுப்பினர். அவர்  பதில் அளித்து கூறியதாவது,
tamil
பொது சிவில் சட்டத்தை  குஷ்பு ஆதரித்திருப்பது வரவேற்கத்தக்கது.  மாற்றுக்கட்சிகளில் இருந்தாலும் அவர் வரவேற்றிருப்பது நல்ல வி‌ஷயம். ஆனால் பா.ஜனதா அரசு கொண்டு வருவதால் அந்த சட்டத்தை விமர்சனம் செய்வது நல்லதல்ல.
பொது சிவில் சட்டம் வேண்டாம் என்பவர்கள் பெண்ணுரிமைக்கு எதிரான வர்கள் என்றார். மேலும்,
குஷ்புவை பொறுத்தவரை இஸ்லாமிய சமூகத்தில் பிறந்து வளர்ந்தவர். பெண்களின் நிலையை நன்றாக உணர்ந்தவர். பொது சிவில் சட்டம் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். எனவே கட்சிகளுக்கு அப்பாற்பட்டு எல்லோரும் வரவேற்க வேண்டும் என்று கூறினார்.
kushbu
மேலும், பாரதியஜனதா ஜல்லிக்கட்டை ஏற்றுக் கொள்வதாகவும், காவிரி பிரச்சினையை எதிர்ப்பதாகவும் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ஆனால்,  காவிரி பிரச்சினைக்கு தடங்கல் ஏற்பட்டதே காங்கிரஸ் மற்றும் தி.மு.க. ஆட்சியில்தான்.  அ
காளையை காட்சி பொருளாக்கி ஜல்லிக்கட்டை முடக்கியதும் அவர்கள்தான். சுப்ரீம் கோர்ட்டு உடனடியாக 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. கர்நாடக அரசிடம் அதை வலியுறுத்த தி.மு.க.வும் முன்வர வில்லை. காங்கிரசும் முன்வரவில்லை.
பா.ஜனதாவை பொறுத்த வரை சட்டப்படி எந்த பிரச்சினையிலும் நிரந்தர தீர்வை தீட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.
தமிழக அரசியலில் மாற்றம் வரும் என்றார்கள். அந்த மாற்றத்தை பா.ஜனதாவால் மட்டுமே கொடுக்க முடியும். கொள்கையில் மாறுபட்டு இருந்தாலும் சட்டமன்ற குழுவை அமைக்க வேண்டும் என்ற மு.க.ஸ்டாலின் கருத்தை வரவேற்கிறேன்.
கலைஞர் சிகிச்சையில் இருந்தபோதும் ஆஸ்பத்திரியிலேயே நிதி நிலை அறிக்கையை விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த சிகிச்சை வேறு, இப்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெறும் சிகிச்சை வேறு. சிகிச்சையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்பது எனது தாழ்மையான கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.