சென்னை

நேற்று நடைபெற்ற தமிழகஅமைச்சரவை கூட்டத்தில் பொதுவான கட்டிட விதிகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வரும் 23, 24ந்தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு என்று நடைபெற உள்ள நிலையில்,  தமிழகத்தில் 11 நிறுவனங்கள் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்வதற்கு  அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

வெளி மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங் களின் முதலீடுகளை ஈர்த்து, தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்கச் செய்து, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளத்தை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக பல்வேறு நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண் டும்,  முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன.  இதற்கு தமிழக அமைச்சரவையின் ஒப்புதல் அவசியம்.

இந்த நிலையில் நேற்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில்  தொழில் துறை தவிர மேலும் சில துறைகள் தொடர்பான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

11 நிறுவனங்கள்தொழில் துறை சார்பில், இக்கூட்டத்தில் 11 நிறுவனங்கள் ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்யவும், அந்தநிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகள் தொடர்பாக வும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், உணவுப் பூங்காக்கள் தொடர்பான ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதுபேல வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பான கொள்கை வடிவ மைக்கப்பட்டுள்ளது. இதை வரும் 23-ம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார்.

வீட்டுவசதி விதிகள்தமிழகத்தில் அனைத்து தரப்பினருக்கும் இலவசமாக அனுமதிக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான தளப்பரப்பு குறியீடு 1.5 சதவீதத்தில் இருந்து 2 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு உட்பட்டு, வரைவு விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ட்டிடத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும், விதிமீறல்களை ஆரம்ப நிலையிலேயே தவிர்க்கும் வகையிலும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன இந்த விதிகளுக்கும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி,  கட்டிட அனுமதிக்கான எளிமையான பயன்பாட்டு படிவங்கள், வளர்ச்சி விதிகளின் தரமதிப்பீடு மற்றும் திட்டமிடல் அதிகாரிகளின் பகுப்பாய்வுத் திட்டத்தின் பகுதியை நீக்கு வதற்கான நோக்கங்கள் ஆகியவை இணைந்த அபிவிருத்தி ஒழுங்குமுறை மற்றும் கட்டிட விதிகள் வகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, கட்டிடம் சம்பந்தமான   பொதுவிதிகளில் திருத்தம் செய்து ஒரு வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டு, அதை  வரும் ஜூலை மாதம் பொதுமக்கள் பார்வைக்கும் வைக்கப்பட்டு, அது தொடர்பான ஆட்சேனை மற்றும் ஆலேசானை கோரப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பின்னர் அதன்படி மாற்றங்கள் செய்யப்பட்டு, திருத்தப்பட்ட வரைவு அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டு, மாநில சட்ட துறையின் கண்காணிப்பின் பின்னர், வீடமைப்பு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை ஒரு வாரத்தில் விதிமுறைகளை அறிவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அதுபோல, பல அடுக்கு மாடி கட்டடங்களின் விஷயத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் திட்டமிடப்பட்ட கட்டிடத் தளங்களின் கட்டுமானம் குறித்து  ஒரு கூட்டு ஆய்வு விதிகள் செயல்படுத்தும் வகையிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. ஆனால்,  ஆனால் உள்ளூர் அமைப்பு (நகராட்சி நிறுவனங்கள், நகராட்சிகள், நகரம் மற்றும் கிராம பஞ்சாயத்துகள்) ஆகியவற்றைப் பொறுத்தவரையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள அதே விதிமுறை விதிமுறைகைளே தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த பொதுவிதிகள்  நகர்ப்புற மையங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும், நகரங்களில் கிடைக்கும் நிலம் அதிக பயன்படும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.‘

இதுவரை, கட்டிடங்களின் இயல்பு, அளவு மற்றும் இடம் ஆகியவற்றைப் பொறுத்தும், இடம் அமைந்துள்ள பகுதி ஆகியவை குறித்து ஆய்வு  செய்து டிடிசிபி  (DTCP) அல்லது சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (CMDA)  விதிகளின்படி ஒப்புதல் வழங்கப்பட்டு வந்தது. இது பொதுமக்களுக்கு கடுமையான மனஉளைச்சளையும், முறைகேடுகளையும்  ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது பொது விதிகள் வகுக்கப்பட வேண்டியது அவசியமாகி உள்ளது.

மேலும், தமிழக பட்ஜெட் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.