டெல்லி:  விவசாயிகளின் நலனில் உறுதியாக இருக்கிறேன், விவசாயிகளின் ஒவ்வொரு குறைகளையும்  நிறைவேற்ற  மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது  என பிரதமா் மோடி தெரிவித்து உள்ளார்.

தலைநகர் டெல்லியை நோக்கி விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் நிலையில், நேற்று (21ந்தேதி) நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கரும்பு கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது.   கரும்புக்கான குறைந்த பட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.25 உயர்த்தி ரூ.340-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,   நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நலன் தொடர்பாக ஒவ்வொரு தீர்மானத்தையும் நிறைவேற்ற எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த சூழலில் கரும்பு கொள்முதல் விலை உயர்வுக்கு வரலாற்று சிறப்புமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கையால் கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளார்.