அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் முத்து வெங்கடேஸ்வரன் தற்கொலைக்கு தென் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் காரணம் என புகார் எழுந்துள்ளது.
அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் முத்து வெங்கடேஸ்வரன் கடந்த 17-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்காண காரணம் என்னவென்று உறுதியாக தெரியாத நிலையில் பல்வேறு காரணங்கல் சொல்லப்படுகின்றன.
“முத்துவின் தற்கொலைக்கு தென் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரே காரணம்” என்று அரசு ஊழியர் சங்கங்க வட்டாரத்தில் குமுறல் கேட்க ஆரம்பித்துள்ளது.
இன்னும் சில நாட்களில் இந்தக் குமுறல் வெளிப்படையான புகாராக மாறும் சூழல் நிலவுகிறது..
திருநெல்வேலியில் கடந்த ஆண்டு வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி ரயில் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக தமிழக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு சிறைவாசமும் அனுபவித்தார். அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.