சென்னை: சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் ரூ.70.50 பைசா குறைந்துள்ளது. நாட்டிலேயே மற்ற மாநிலங்களை விட அதிக விலையில் தமிழ்நாட்டில்தான் சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கச்சா எண்ணையின் விலையைத் தொடர்ந்து, நாட்டில் ஒவ்வொரு மாதமும் எரிவாயு சிலிண்டர் விலைகள் மாறி வருகிறது. அதன்படி, இந்த மாதம் (ஜூன்) மாத முதல் நாளிலேயே வணிக சிலிண்டர் விலையை எண்ணை நிறுவனங்கள் குறைத்துள்ளது. அரதனப்டி, நாடு முழுவதும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை 70.50 குறைந்துள்ளது.
ரூ. 1911-ல் இருந்து சிலிண்டர் விலை 1840.50 காசுகளாகக் குறைந்துள்ளது. கடந்த மே மாதம் 19 ரூபாய் விலை குறைக்கப்பட்ட நிலையில் தற்போது 70.50 காசுகள் குறைந்து விற்பனையாகிறது. வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ. 818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் சில்லறை விற்பனை விலை ரூ.1,676 ஆக உள்ளது.
கொல்கத்தாவில் 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் சில்லறை விற்பனை விலை ரூ.1787 ஆகவு உள்ளது.
மும்பையில், 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் சில்லறை விற்பனை விலை ரூ.1629 ஆக உள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தான் மற்ற மாநிலங்களை விட அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மாநில அரசின் வரி விதிப்பு காரணமாக, சென்னையில் விலை குறைக்கப்பட்டும் ரூ.1840.50 ஆக விற்பனை செய்யப்பட்டுகறிது.