சென்னை

இன்று முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது/

மத்திய அரசு எரிவாயு சிலிண்டர் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி  ஒவ்வொரு நாளூம் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. அதாவது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.5.50 உயர்ந்து ரூ.1,965க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே இதன் விலை ரூ. 1,959.50 ஆக இருந்தது.

 

[youtube-feed feed=1]