கோல்டுகோஸ்ட்:

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இந்த வகையில் இன்று ஒரே நாளில் மட்டும் இந்தியா 8 தங்கப் பதக்கங்களை கைப்பற்றி அசத்தியள்ளது. மொத்தம் 25 தங்க பதக்கத்தை பெற்று இந்தியா பதக்க பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளது.

இன்று தங்கம் வென்ற இந்தியர்கள்

# பெண்களுக்கான ‘லைட் பிளை வெயிட்'(41- 45 கி.கி.,) பிரிவு குத்துச்சண்டையில், மேரிகோம், வடக்கு அயர்லா ந்தின் கிறிஸ்டினாவை வென்று தங்கம் வென்றார்.

# ஆண்கள் பிளைவெயிட்(52 கி.கி.,) குத்துச்சண்டையில், இந்தியாவின் கவுரவ் சோலங்கி வடக்கு அயர்லாந்தின் இர்வினை வென்று தங்கம் வென்றார்.

# ஆண்கள் மிடில் வெயிட் (75 கி.கி.,) பைனலில் விகாஷ் கிருஷ்ணன் காமரூனை சேர்ந்த வில்பிரட்டை வீழ்த்தி தங்கம் வென்றார்.

# ஆண்களுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் துப்பாக்கிச்சுடுதலில் அசத்திய இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புட் 4 54.5 புள்ளி பெற்று, காமன்வெல்த் சாதனையுடன் தங்கம் வென்றார்.

# ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 86.47 மீ,., தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார்

# மல்யுத்தம் பெண்கள் ‘பிரிஸ்டைல்'(50 கி.கி.,) போட்டியில், வினேஷ் போகத் தங்கப்பதக்கம் வென்றார்.

# ஆண்கள் 125 கி.கி., பிரிஸ்டைல்(125 கி.கி.,) மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சுமித் மாலிக் தங்கத்தை தட்டி சென்றார்.

# மகளிர் டேபிள் டென்னிசில் சிறப்பாக செயல்பட்ட மணிகா பத்ரா தங்கம் வென்றார்.