ஸ்லாமாபாத்

ரும் ஜனவரி மாதம் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.  எனவே தற்போது அந்நாட்டில் காபந்து அரசு ஆட்சி செய்து வருகிறது.  இந்த காபந்து ஆட்சியில் அன்வர் உல் ஹக் கக்கர் பிரதமராக உளார்.

இந்நிலையில் பாகிஸ்தானில் வரும் ஜனவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் காபந்து அரசு ஆட்சி செய்து வரும் நிலையில் , பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வரும் அக்டோபர் மாதம் தேர்தல் முதலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.   ஆனால் தற்போது ஜனவரி மாதம் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.