சென்னை

ரும் 23 ஆம் தேதி குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகச் சென்னையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் பேரணி நடத்த உள்ளன

குடியுரிமை சட்டத்திருத்தம் மசோதா நிலையில் இருந்த போதிலிருந்தே திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.   பாஜகவுக்கு மக்களவையில் பெரும்பான்மை இருந்ததால் அந்த மசோதா நிறைவேறியது.   அதைப் போல் மாநிலங்களவையிலும் அதிமுக ஆதரவுடன் மசோதா நிறைவேறி உள்ளது.

அதன் பிறகு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.   அதைத் தொடர்ந்து அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும்,  டில்லி உள்ளிட்ட நகரங்களிலும் கடும் போராட்டம் நடந்துள்ளது.   டில்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறையினர் வன்முறைத் தாக்குதல் நடத்தி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்திலும் குடியுரிமைச் சட்டத் திருத்த எதிர்ப்பு போராட்டம் நடந்ததால் பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது   இன்று அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை திமுக கூட்டியது.  அந்தக் கூட்டத்தில் வரும் 23 ஆம் தேதி இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இணைந்து பேரணி நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.