சபரிமலை
வரும் 16 ஆம் தேதி மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது

இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நிர்வாகத்தால் அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. மண்டல பூஜைக்காக வருகிற 16 ஆம் தேதி மாலை 5 மணிக்குக் கோவில் நடை திறக்கப்படுகிறது.
பிறகு 17 ஆம் தேதி முதல் டிசம்பர் 27 ஆம் தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று. 27 ஆம் தேதி இரவு நடை அடைக்கப்படும். மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.
மகரவிளக்கு பூஜைகள் 31 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 15 ஆம் தேதி வரை மகரவிளக்கு பூஜைகள் நடைபெறும். ஜனவரி மாதம் 15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் நடைபெறும். அதைத் தொடர்ந்து 19 ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.
ஜனவரி 20 ஆம் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்குப் பின்னர் கோவில் நடை அடைக்கப்படும். அன்றுடன் நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவுபெறும்.
[youtube-feed feed=1]