டில்லி

ரும் 10 ஆம் தேதி அன்று டில்லி நோக்கி செல்லும் பேரணியில் ரயில் மறியல் செய்ய உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

விவசாய சங்கத்தினர் விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியை நோக்கி பேரணி நடத்த முடிவு செய்தனர். இதையொட்டி பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்தில் இருந்து விவசாயிகள் புறப்பட்டனர். அரியானா, பஞ்சாப் மாநில எல்லைகள் மூடப்பட்டு, விவசாயிகள் டில்லி நோக்கிச் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

விவசாயிகள் பஞ்சாப்-அரியானா இடையிலான எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 201 ஆம் தேதி இந்த போராட்டத்தில் விவசாயிகள் மற்றும் காவல்துறையினரிடையே ஏற்பட்ட மோதலில் 21 வயதான சுப்கரன் சிங் என்ற விவசாயி உயிரிழந்தார்.  பஞ்சாப் மாநிலக் காவல்துறையினர் இதையொட்டி கொலைவழக்கு பதிவு செய்துள்ளனர் .

விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது ,

”டில்லி நோக்கி பேரணி செல்லும் திட்டம் தொடரும். நாங்கள் அதிலிருந்து பின் வாங்கவில்லை. எங்கள் பலத்தை எல்லையில் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.

 இதையொட்டி நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் வருகிற 6 ஆம்தேதி ரயில், பேருந்து, விமானம் மூலம் நாடு முழுவதிலும் இருந்து டில்லிக்கு வருவார்கள். 

அதைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவைப் பெறும் வகையில் மார்ச் 10 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம்” 

என்று தெரிவித்தார்.