ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் நகரில் ஜி20 உச்சி மாநாடு நடந்து முடிந்துள்ளது. அதில் கலந்துகொண்ட உலகத் தலைவர்களின் செய்கைகள், நடவடிக்கைகள் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

ஜி20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் அனைவரும் ஒன்றாக குரூப் போட்டோ எடுக்க நின்று கொண்டிருந்தனர். அப்போது ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் கீழே இறங்கி அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு பக்கத்தில் வந்து நின்றார். அதற்குமுன், டிரம்பின் தோலில் ஆசையாக தட்ட அதை சற்றும் எதிர்பாராத டிரம்ப் சிரித்தார்.

அடுத்து போலந்தின் முதல் பெண்மணியுடன் கைகுலுக்க டொனால்ட் டிரம்ப் கையை நீட்டிய போது அதை ஏற்காமல் முதல் பெண்மணி அகாட்டா கொர்ன்ஹவுசர்-டுடா டிரம்பின் மனைவி மெலானியா டிரம்புடன் கைகுலுக்கினார். இது டிரம்பிற்கு பெரும் தர்மசங்கடமாக போனது.

ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின், ஏங்கெல்லா மெர்கல் சந்தித்தபோது, மெர்கலிடம் விஷயம் ஒன்றை புதின் விளக்கி கூறினார். அப்போது ஏங்கெல்லா மெர்கல் தனது கண்களை உருட்டி உருட்டி பார்த்தார்.

அடுத்ததாக, மெக்ஸிகோ அதிபர் என்ரிக் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது செய்தியாளர் ஒருவர் டிரம்பிடம், இப்போதும் இருநாட்டு எல்லையில் மதில் சுவர் கட்டும் திட்டத்துக்கு மெக்ஸிக்கோதான் பணம் செலுத்த வேண்டுமா? என்றார்.

அதற்கு சற்றும் தாமதிக்காமல் பதிலளித்த டிரம்ப், ‘நிச்சயமாக’ என்றார். டிரம்பின் பதில் சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் கூலாக இருந்தார் என்ரிக்.

ஜி20 உச்சி மாநாட்டில் கேலிக்கு உள்ளான உலகத் தலைவர்களின் காணொளிகள் சமூக ஊடகங்களிலும், மீம்ஸ்களாகவும் பரவி வருகிறது.