சென்னை:
பிரபல தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி உடல் நலக்குறைவால் காலமானார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்தவர் சிவ நாராயண மூர்த்தி(67) இவர் நடிகர் விசு மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். பூந்தோட்டம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் சிவாஜி கணேசன், ரஜினி, விஜய், அஜித், உள்ளிட்டோரியின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் சிவ நாராயணமூர்த்தி நகைச்சுவை நடிகர்கள் வடிவேலு, விவேக் உடன் சேர்ந்து பிரபலமான நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார் சிவ நாராயண மூர்த்தி.

திடீர் உடல் நலக்குறைவால் இன்று காலை எட்டு முப்பது மணி அளவில் காலமானார். சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் வசித்து வந்த நிலையில் அங்கே உயிரிழந்திருக்கிறார். இவரின் இறுதிச்சடங்கு நாளை மதியம் ரெண்டு மணிக்கு நடைபெற இருக்கிறது.

பட்டுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார மக்கள் நேரில் வந்து சிவ நாராயண மூர்த்திக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மறைந்த சிவ நாராயண மூர்த்திக்கு மனைவி புஷ்பவல்லி, இரண்டு ஆண் பிள்ளைகள் ஒரு பெண் பிள்ளை உள்ளனர்.