சென்னை:
நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்.

1985-ல் ஆண்பாவம் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நெல்லை சிவா, வெற்றிக் கொடிகட்டு, திருப்பாச்சி, அன்பே சிவம் போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நெல்லை சிவா. நெல்லை தமிழில் பேசிய சிவா, வடிவேலுவுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
அந்தவகையில், அவரது ‘கெணத்தை காணோம்’ காமெடி மிகவும் பிரபலமானது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சின்னத்திரை தொடரிலும் அவர் நடித்து வந்தார். ஊரடங்கு காரணமாக, திருநெல்வேலி மாவட்டம் பனங்குடியில் இருந்த அவர், மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார்.
Patrikai.com official YouTube Channel