கொரோனா பேரிடரை எதிர்கொள்ள நன்கொடை வழங்க முதலமைச்சர் வேண்டுகோள்

Must read

சென்னை:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்த செய்திக் குறிப்பில், வரலாறு காணாத கொரோனா பேரிடரை எதிர்கொள்ள, கூடுதலான நிதி ஆதாரங்களை செலவிட வேண்டிய நிலை உள்ளதால் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெறப்பட்ட நன்கொடை விபரங்கள் மற்றும் செலவினங்கள் அனைத்தும் ஒளிவு மறைவு இன்றி கொரோனா பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு விவரங்கள் வெளிப்படையாக வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்கொடை வழங்குவதை தவிர்க்கவும், https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html என்ற இணையதளம் மூலமாகவோ, 117201000000070 என்ற தலைமைச் செயலக வங்கி கணக்கிற்கோ நன்கொடை அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article