நாடு முழுவதும் ஜனவரி 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட முன்களப்பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நேற்று வரை 1,85,299 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில், 10,550 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இவர்களில், 7,436 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 1480 பேருக்கு கோவாக்ஸின் தடுப்பூசியும் போடப்பட்டு உள்ளது.
தடுப்பூசி தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தான் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.