மணிப்பூரில் பயங்கரவாதிகளின் வெடிகண்டு வீச்சு மற்றும் துப்பாக்கி சூட்டில் ராணுவ அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோக சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனமும், இரங்கலும் தெரிவித்து உள்ளார்.
மணிப்பூர் சூரசந்த்பூர் மாவட்டத்தில் அசாம் ரைஃபல்ஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரி, அவரது மனைவி மற்றும் 8 வயது மகனுடன் வாகனங்களில் சென்றபோது, பயங்கரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் கர்னல் விப்லவ் திரிபாதி, அவரது குடும்பத்தினர் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர்.
அந்த பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், அவர் வாகனம் மீதும், அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீதும் வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தி, பின் துப்பாக்கிச்சூடும் நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் ராணு அதிகாரி, அவரது குடும்பத்தினர், 4 வீரர்கள் ஆகியோர் உயிரிழந்த நிலையில், மேலும் 4ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.