வாழப்பாடி அருகே கல்லூரி மாணவியை கடத்தியதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாணவர் ஒருவரை கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.

வாழப்பாடியை அடுத்த மின்னாம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அஜீத். சேலம் அம்மாப்பேட்டை தனியார் கல்லூரியில் பி.காம். 3ம் ஆண்டு படித்த இவருக்கும், அதே கல்லூரியில் பி.எஸ்.சி முதலாமாண்டு படித்த வாழப்பாடியை அடுத்த சின்னமநாயக்கன் பாளையம் கிராமத்தை சேர்ந்த 18 வயது மாணவி ஒருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இந்நிலையில், சம்பவத்தன்று 18 வயது நிறைவடையாத தனது மகளுக்கு திருமண ஆசை காட்டி அவரை அஜீத், கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக மாணவியின் தாயார் வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக அஜீத்தை, கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
பெற்றோருடன் செல்ல மறுத்த மாணவியை, சேலம் காப்பகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
[youtube-feed feed=1]