அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகியுள்ள படம் பிகில் .ரிலீஸான சில மணிநேரத்திலேயே அது தமிழ் ராக்கர்ஸில் கசிந்துவிட்டது. 180 கோடி ரூபாய் பொருட்செலவில் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது.
தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்கிரீன் சீன் நிறுவனம் சுமார் 83 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.
விமர்சன ரீதியாகக் சற்றே தொய்வு இருந்தாலும், வசூல் ரீதியாகப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
உலகளவில் மொத்த வசூலில் சுமார் 100 கோடியைக் கடந்து சாதனை புரிந்துள்ளது ‘பிகில்’. அமெரிக்காவில் இதுவரை 940K டாலர்கள் வசூல் செய்துள்ளது.
இங்கிலாந்தில் 2.31 கோடி ரூபாயும், ஆஸ்திரேலியாவில் 1.59 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது. சென்னையில் மட்டும் வெள்ளிக்கிழமை – 1.79 கோடி, சனிக்கிழமை – 1.73 கோடி, ஞாயிற்றுக்கிழமை – 1.74 கோடி என மொத்தமாக இதுவரை 5.26 கோடி வசூல் செய்துள்ளது.
தெலுங்கில் 10.5 கோடி வசூல் செய்துள்ளது . கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் சுமார் 10 கோடியைத் தாண்டியுள்ளது வசூல்.