சென்னை: தமிழ்நாடு முழுவதும் குளிர் வாட்டி எடுத்து வரும் நிலையில், மேலும் 2 நாட்கள் குளிர் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஓய்வுபெற்றலும் குளிர் வாட்டி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் பல பகுதிகளில் அடுத்த 2 நாட்கள் மூடுபனியுடன் கூடிய குளிர் நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை ஜனவரி 19ந்தேதி விலகியதால் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை வரை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இரவில் குளிர் தொடர வாய்ப்பு உள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 23-ந்தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]