சென்னை
ஆந்திர துணைமுதல்வர் பவன் கல்யாண் மற்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இடையே பனிப்போர் முற்றி வருகிறது
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கி ‘சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ரையாற்றினார்
உதயநிதி,
“இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல், `சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் சனாதனம்’”
என்று பேசி இருந்தார்.
உதயநிதியின் பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது ராஜஸ்தான், உ.பி. மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்கள் புகாரும், நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடர்ந்தனர். சனாதனம் குறித்த்ப் பேசிய தமிழக துணை முதல்வ்ர் உதயநிதி ஸ்டாலினை ஆந்திர துணை முதல்வ்ர் பவன் கல்யாண் மறைமுகமாக சாடினார்.
நேற்று திருப்பதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பவன் கல்யாண்,
“இங்கே நிறைய தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பதால் தமிழிலேயே சொல்கிறேன். சனாதனம் என்பது ஒரு வைரஸ் மாதிரி. அதை நாசம் செய்யவேண்டும் என்று தமிழ்நாட்டில் ஒருவர் சொல்லியிருக்கிறார். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் இதை யார் சொல்லியிருந்தாரோ அவருக்கு சொல்லிக் கொள்கிறேன்.
உங்களால் சனாதன தர்மத்தை அழிக்கமுடியாது. சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள் தான் அழித்து போவீர்கள். உங்களைப் போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள். ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது”
எனத் தெரிவித்தார்.
பவன் கல்யாணின் சாடல் குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் சென்னையில் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு, யாருக்கு சொல்லியிருக்கிறார் என தெரியவில்லையே எனக் கேள்வி எழுப்பினார். பின்னர், ‘ஓகே லெட் வெயிட் அண்ட் சீ’ எனக் கூறிக்கொண்டே காரில் சென்றார்