கோவை:
கோவை மெட்ரோ ரயில் திட்டம் தயாராகியுள்ளது.
கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக முக்கிய ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமீபத்தில் நடந்தது.
அதில், முதல்கட்டமாக எந்தெந்த வழித்தடங்களில் பணிகள் தொடங்கப்படும் என்பது குறித்த விளக்கப் படம் காண்பிக்கப்பட்டது. அதன்படி, கோவை மாநகரில் மொத்தம் 139 கிலோமீட்டர் தூரத்திற்கு மூன்று கட்டங்களாக மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் முதல்கட்டமாக, என 44 கிலோமீட்டர் தூரம் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் உருவாக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டங்கள் மாநில அரசின் ஒப்புதலுக்கு பின்னர் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் 139 கிலோமீட்டர் தூரம் கொண்ட கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தவும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.