கோவை:
கோவையில் கடந்த சில தினங்களுக்கு கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த 22ந்தேதி இந்து முன்னணியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து நடைபெற்ற சசிகுமாரின் இறுதி ஊர்வலத்தில் பெரும் கலவரம் வெடித்தது.
இந்நிலையில் சசிகுமார் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்படுவதாக தமிழக டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சசிக்குமாரின் கொலை வழக்கில் அமைக்கப்பட்டிருந்த தனிப்படை விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாததால் வழக்கை சிபிசிஐடி க்கு மாற்றுவதாக டி.ஜி.பி தெரிவித்துள்ளார்.
இன்று சசிகுமாரின் அஸ்தி ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. அதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Patrikai.com official YouTube Channel