கோவை:
கோவை அருகே காரமடை அடுத்த மானார் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி செல்வம்(45). இவர் வேலைக்கு சென்று திரும்பும் வழியில் காட்டு யானை தாக்கி பலியானர்.

மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு வந்த செல்வம், முள்ளி அருகே மஞ்சூர் ரோடு பகுதியில் புதரில் மறைந்திருந்த காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை கைபற்றிய வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
[youtube-feed feed=1]