தண்டபாணிசுவாமி திருக்கோயில், கௌமாரமடாலயம், சின்னவேடம்பட்டி, கோயம்புத்தூர்

தல சிறப்பு :
சித்திரை முதல்நாள் மூலஸ்தான முருகன்மீது சூரியவளி படுகிறது.
பொது தகவல் :
கிழக்கு நோக்கி கோயில் அமைந்துள்ளது. மூலவர் முருகன் கிழக்கு பார்த்த திருக்கோயில், விமானம் தஞ்சை பெருவுடையார் கோயில் விமான அமைப்பு, பாண்டுரங்கன் கோயில், விமானம் வடநாட்டு கோயில் விமான அமைப்பில் அமைந்துள்ளது.
தலபெருமை :
முப்பெரும் சமாதி வளாகம், அதின குருமுதல்வர், திருப்பெருந்திரு இராமானந்த சுவாமிகள் கவுமார மடாலய நிறுவனர். தவத்திரு கவிக்கடல் கந்தசாமி சுவாமிகள் இரண்டாவது குருமகா சந்நிதானங்கள், தவத்திரு கஜபூசை சுந்தர சுவாமிகள், மூன்றாவது குருமகா சந்நிதானங்கள் அமைந்துள்ளன தண்டபாணிக் கடவுள் திருக்கோயிலில், சித்தி விநாயகர். கருணாம்பிகை உடனுறை அவிநாசியப்பர், பாண்டுரங்கன், சூரியனார். சனீஸ்வரர், பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன.
திருவிழா :
தைப்பூச மறுநாள் ஆடிக்கிருத்திகை, அன்று தெப்பத்திருவிழா நடைபெறும். தைப்பூசம், கந்தசஷ்டி விழா அடிக்கிருத்திகை, கார்த்திகை, கிருத்திகை. மகாசிவராத்திரி, வைகுண்டஏகாதசி கொண்டாடப்படுகின்றன.
பிரார்த்தனை :
கந்தசஷ்டி விரதம் இருந்து திருமணம் ஆகாதவர்கள். திருக்கல்யாண விழாவில் பங்குபெற்றால் திருமணதடை நீங்கும்.
நேர்த்திக்கடன் :
திருமணத்தடை நீங்க கந்தசஷ்டிப் பெருவிழாவில் மறுநாள் திருமண உற்சவ விழாவில் பங்குபெற்று தங்களால் இயன்றதை செலுத்துகின்றனர்.