கோவை:
கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம் உழியூ, மொக்கைமேட்டில் 2008ம் ஆண்டில் மான் வேட்டையடிய வழக்கில் அதே பகுதியை சேர்ந்த முருகேஷ், நாகராஜ், குஞ்சான், சுப்பன், அய்யாவு, ராசுக்குட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை கைது செய்த வனத் துறையினர் மேட்டுப்பாளையம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சரவண பாபு கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் தலா 6 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு கூறினார்.
Patrikai.com official YouTube Channel