சென்னை: தேங்காய் எண்ணைக்கு ஜிஎஸ்டி வரி 18% ஆக உயர்த்தப்பட்டு உள்ளதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர்களில் ஒருவரான வாழப்பாடி ராமசுகந்தனும் மத்தியஅரசின் நடவடிக்கையை கடுமையாக  விமர்சித்து உள்ளார்.

இந்தியாவின் உள்நாட்டு சமையல் எண்ணெய் மொத்த நுகர்வில், மூன்றில் இரண்டு பங்கு இறக்குமதி எண்ணையை நம்பியே உள்ளது. இறக்குமதி எண்ணெய்க்கு அரசு மானியம் கொடுக்கிறது. ஆனால், இந்தியாவில் விளையும், குறிப்பாக தென்மாவட்டங்களில் அதிகம் விளையும் தேங்காயில் இருந்து தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய்களுக்கு அரசு மானியம் கொடுப்பதில்லை. இதில் மத்தியஅரசு ஓரவஞ்சனை செய்து வருகிறது. 1 லிட்டருக்கு குறைவான ஓரலகு கொண்ட பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்  18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுஉள்ளது.

இது விவசாயிகளிகள் மற்றம் வியாபாரிகளிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தேங்காய் எண்ணைக்கு மானியம் வேண்டும் என குரல் கொடுத்து வரும் நிலையில், ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்பதற்கு மாறாக, வரியை உயர்த்தி உள்ளதற்கு தமிழ்நாடு கள் இயக்கம், பொள்ளாச்சி வியாபாரிகள் என பல தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. . குறிப்பாக, தேங்காய் எண்ணை அதிகம் உபயோகப்படுத்தும்  தென்மாவட்டங்களில் மத்தியஅரசின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தேங்காய் எண்ணையின் ஜிஎஸ்டி உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதர எண்ணை வகைகளுக்கு 5% ஜிஎஸ்டி இருக்கும்போது, தென்னிந்தியாவில் உற்பத்தி ஆகும் தேங்காய் எண்ணைக்கு மட்டுமே 18% ஜிஎஸ்டி என்பது நியாயமற்றது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக டிவிட் பதிவிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர் வாழப்பாடி இராமசுகந்தன்,  தேங்காய் எண்ணெய்க்கு வரி 5% இருந்து 18% வேறவாம், முடிஞ்சவர பிராண்ட் இல்லாமல் விற்கலாம் மர செக்கு உறத்தியாளர்கள், பிராண்ட் போட்டாதானே சிக்கல் உணவுப்பொருளுக்கு வரி கண்டிப்பா போடலாம், ஆனால் அது அநியாயத்துக்கு இருக்கக்கூடாது என்பதுதான் சாமானியர்களின் எதிர்பார்ப்பு நிர்மலா சீத்தாராமன் என டிவிட் மூலம் தனது கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

தேங்காய் எண்ணைய்க்கான ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு  நெட்டிசன்கள் கடுமையான கண்டனமனை பதிவிட்டு வருகின்றனர். 

தேங்காய் எண்ணெயை 1லிட்டருக்கு குறைவான குடுவையில் அடைத்து விற்றால் 18% ஜிஎஸ்டி, அதற்கு மேல் உள்ள குடுவை என்றால் 5% ஜிஎஸ்டி வரியாம். தேங்காய் எண்ணெய் அதிகம் பயன்படுத்துவது தென் இந்தியா. தெரிந்து செய்தார்களா? புரியாமல் செய்தார்களா? எப்படியானாலும், ஆப் கி பார்! துக்ளக் தர்பார்!  

தேங்காய் எண்ணெய்க்கான ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி இருப்பதாகத் தெரியவருகிறது. இது ஒரு விவசாய விரோதப் போக்கும் என்றும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

மக்கள் வாழ்வாதாரத்தை முடக்கி வரும் மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கொதித்தெழுந்துள்ளனர்.