விக்ரமின் ‘கோப்ரா’ திரைப்பட டீஸர் வெளியீடு….!

Must read

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மிர்னாலினி ரவி, பூவையார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். AR ரஹ்மான் இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் டீஸர் வெளியானது. இந்த டீஸரை கொண்டாடி வருகின்றனர் சியான் ரசிகர்கள். டீஸர் காட்சிகளில் பல கெட்டப்புகளில் வருகிறார் விக்ரம். கணித வாத்தியராக இருந்து கொண்டு அவர் செய்யும் குற்றங்களை கண்டு பிடிக்கும் இன்டர்போல் அதிகாரியாக இருக்கிறார் இர்ஃபான் பதான். ஒளிப்பதிவு, பின்னணி இசை என பட்டையை கிளப்புகிறது கோப்ரா டீஸர். அஸ்லான் இல்மாஸ் எனும் இன்டர்போல் அதிகாரியாக நடித்துள்ளார் பதான்.

 

More articles

Latest article