சென்னை: தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள் என விருதுநகர் காங்கிரஸ் எம்.பி.  மாணிக்கம் தாகூர் விமர்சித்து உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் இதுதொடர்பாக கடந்த சில நாட்களாக பேசி வருகிறார். இது கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்தியா டுடே வட்டமேஜை நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது. இது திமுகவுக்கும் தெரியும், காங்கிரசுக்கும் தெரியும். தி.மு.க-காங்கிரஸ் இணைந்து போட்டியிடும். அரசியலையும் தாண்டி என்னுடைய சகோதரரைப் போன்றவர் ராகுல்காந்தி. சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும்” என்றார்.   கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த இடையில் சிலர் திட்டமிட்டு சதி செய்கின்றனர் என சாடியிருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு பதில் தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் தனது எக்ஸ் தளத்தில்,  கூட்டணி ஆட்சியா, ஒரு கட்சி ஆட்சியா என்பதை வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் முடிவு செய்வார்கள் என   தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

மக்கள் முடிவு செய்வார்கள் .

கூட்டணி ஆட்சியா்? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை .

2006யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம்  @INCTamilNadu தவறு.

இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியில் பங்கு ஒத்து வராது என்பது காங்கிரசுக்கும் தெரியும் – 200க்கும் மேற்பட்டதொகுதிகளில் திமுக வெற்றிபெறும்! முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

காங்கிரஸ் உள் கட்சி பிரச்னையில் கூட்டணி கட்சிகள் தலையிட வேண்டாம்’! மாணிக்கம் தாகூர்

36 நாட்களாகக் காத்திருக்கிறோம் – தோழமையை மதித்து பொறுமை காக்கிறோம்! திமுக தலைமையை சாடிய மாணிக்கம் தாகூர்…

 

[youtube-feed feed=1]