டைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், இருபெரும் திராவிட கட்சிகளுக்கும் வலிமையான தலைமை இல்லாத நிலையில், வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது. தற்போதைய தமிழக தேர்தல் நிலவரத்தை காணும்போது, தேர்தலில் திமுக வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது. இதற்கு காரணம் வலிமையான கூட்டணி என்பதே உண்மை.

இருந்தாலும், எடப்பாடி அரசின் சமீபகால நடவடிக்கைகள், மக்களிடையே அதிமுக அரசு மீதான அதிருப்திகளை குறைத்துள்ளது என்பதையும் மறுக்க முடியாது.  புயல் சேதம், நிவாரணம், கொரோனா பொதுமுடக்கத்தின்போது வழங்கிய நிவாரணம், பொங்கல் பரிசு, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்காக வழங்கிய இடஒதுக்கீடு, தற்போதைய விவசாய கடன் தள்ளுபடி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் தள்ளுபடி போன்றவைகளால் எடப்பாடி அரசுமீது சாப்ட் கார்னரையே உருவாக்கி உள்ளது.

ஆனால், சசிகலா வருகை, பாஜகவின் சித்துவிளையாட்டு, கூட்டணி குழப்பம்  போன்ற காரணங்களால், அதிமுக பலவீனப்படுத்தப்படும் என திமுக உள்பட அதன் கூட்டணி கட்சிகள் நம்பிக்கொண்டிருக்கி றார்கள். ஒருவேளை, அவர்களின் கூற்று உண்மையானால், வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக எளிதாக வெற்றி பெறும்  என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஆனால், சசிகலா அதிமுகவுக்கு குடைச்சல் கொடுக்காமல் ஒதுங்கினாலோ, கமல்ஹாசன் தனித்து போட்டியிட்டாலோ வாக்கு வங்கிகள் சிதறிவிடும் என்பதையும் மறுக்க முடியாது.  அதுபோன்ற ஒரு அரசியல் சூழல் தமிழகத்தில் உருவாகி வாக்குகள் பிரிந்தால், திமுகவின் வெற்றி அசாதாரணமானதுதான்…

ஏனென்றால், கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க. என நான்கு முனைப் போட்டி நிலவியது. அதனால், பலன் அடைந்தது அதிமுகதான் என்பதையும் யாரும் மறந்துவிட முடியாது.

ஆனால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், அதிமுக, திமுக தலைமையில் கூட்டணிகள் இருந்தாலும், கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்குவதில் இரு பெரும் கட்சிகளும் தயக்கம் காட்டி வருவது தெரிகிறது.

அதிமுகவின் வலிமையற்ற தலைமையை தங்களுக்கு சாதகமாக்க பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் மிரட்டி வருவதும் கூட்டணிகளுக்குள் சலசலப்பை உருவாக்கி வருகிறது. அதுபோல திமுக கூட்டணியிலும் மற்ற கட்சிகளுக்கு குறைந்த அளவிலான இடங்களே ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும் புகைந்து கொண்டிருக்கிறது. இதில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால்,  தமிழகத்தில் இருபெரும் திராவிட கட்சிகளின் தலைமை மட்டுமின்றி 3வது ஒரு கூட்டணி உருவாக வாய்ப்பு இருப்பதையும் மறுக்க முடியாது.

ஏற்கனவே நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்து விட்ட நிலையில், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என கூறி வருகிறது. ஆனால், அதன் கூட்டணி திமுகவுடனா அல்லது 3வதுஅணியா என்று தெளிவற்ற நிலையில் உள்ளது. ஆனால்,  திமுக தலைமை கமல் கட்சியை விமர்சிக்க மறுப்பதும், , மக்கள் நீதி மய்யம் திமுகவை நேரடியாக விமர்சிக்க மறுப்பதும், திமுக கூட்டணியில் மநீம இணைய வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. அதே வேளையில், அதிமுக கூட்டணியில் இருந்து பாமக அல்லது தேமுதிக அல்லது பாஜக என ஏதாவது ஒரு கட்சி விலகுமேயானால், அந்த கட்சி தலைமையில் 3வது அணி அமைந்தால், வாக்குகள் சிதறும் வாய்ப்பு ஏற்படும்.

ஏனென்றால், 2016 தேர்தலில், 3வது அணியாக மக்கள் நலக் கூட்டணி ஏற்பட்டு, அதனால், திமுகவுக்கு வரவேண்டிய வாக்குகள் பிரிந்ததால், திமுக ஆட்சி அமைக்க முடியாமல் போனது என்பது அனைவரும் அறிந்த உண்மை. வெறும் ஒரு விழுக்காடு  வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்த திமுக கூட்டணி, அதே தவறை மீண்டும் செய்யக்கூடாது என்பதை நினைவில் வைத்து, தேர்தல் வியூகங்களை வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீப காலமாக திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு தொடர்பான உலா வரும்  தகவல்கள், திமுக கூட்டணிக்குள் குழப்பம் நிலவி வருகிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. வரவுள்ள தேர்தலில் 170  தொகுதிகளுக்கு குறையாமல் திமுக போட்டியிட இருப்பதாக உறுதியற்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.

234 தொகுதிகளில் 170 தொகுதிகளில் திமுக போட்டியிடுமேயானால், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விடுதலைசிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்பட 9 கட்சிகளுக்கும் தலா எத்தனை தொகுதிகள் ஒதுக்கும் என்பது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இதற்கு காரணமாக கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகளை திமுக தலைமை சுட்டிக்காட்டுவதாககூறப்படுகிறது. 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி  வெறும் 8 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியின் தோல்வி, திமுக ஆட்சியை கைப்பற்ற முடியாத நிலைக்கு காரணம் என்று விமர்சிக்கப்பட்டது. இதை கவனத்தில்கொண்டே, திமுக கூட்டணி யில் காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சியினருக்கு தொகுதிகளை குறைப்பதுகு றித்து   யோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஏனென்றால், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் யாரும் திமுக தொண்டர்களைப் போல தீவிரமாக களப்பணியாற்ற முன்வருவதில்லை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கும் தொகுதிகள் வேஸ்ட் என திமுக தலைமை கருதுகிறது. அதனால்தான்,  வர இருக்கும்  தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு குறைவான இடங்களை மட்டுமே ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில், திமுக குறைந்தது 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக இறுதிக்கட்ட தகவல்கள் தெரிவிக் கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 20 முதல் 25 இடங்கள் மட்டுமே ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும்,, அதைத்தொடர்ந்து,  மதிமுக, கம்யூனிஸ்டுகள், விசிக, மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகளுக்கு குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கப்பட உள்ளதாகவும் அறிவாலயம் வட்டார தகவல்கள் கூறுகின்றன. கொங்குநாடு மக்கள் தேசிய, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிகளுக்கு ஓரிரு இடங்களை மட்டுமே ஒதுக்க இருப்பதாகவும், அந்த கட்சிகள்  உதயசூரியன் சின்னத்தில்தான போட்டியிட வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது

திமுகவின் நிபந்தனைகளுக்கு ஒத்துவராத கட்சிகள், தாங்களாகவே கூட்டணியில் இருந்து விலக்கிகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும்,  காங்கிரஸ் கட்சியை டார்கெட் செய்யவே திமுக தலைமை இதுபோன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் விமர்சிக்கப்படுகிறது…

(தொடரும்)

கூட்டணி கலாட்டா -தொடர்1: கூட்டணி கட்சிகளை வேண்டா விருந்தாளியாக நினைக்கும் திமுக தலைமை….