சென்னை:

கூட்டுறவு சங்கத் தேர்தல் பணிகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்படுவதாக, கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

மதுரை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவின்படி, கூட்டுறவு சங்கத் தேர்தல் பணிகள் அனைத்தையும் நிறுத்தி வைக்கப் படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதாக,  தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தொடர்ந்த வழக்கில்,  கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு வேட்பு மனுக்களை வாங்கவோ, அவற்றை பரிசீலிக்கவோ கூடாது எனவும், தற்போதைய நிலையே தொடர வேண்டுமென மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து, தேர்தல் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாகவும், இன்று நடைபெறுவதாக இருந்த வேட்பு மனு பரிசீலனை தள்ளிவைக்கப்படுவதாகவும் கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையின்போது, தேர்தல் ஆணையம் தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கும் என்றும் கூறி உள்ளார்.