திருப்பூர்:

மிழகம் முழுவதும் 2கட்ட கூட்டுறவு சங்க தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், 3வது கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திருப்பூரில் கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது கட்சிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டதால்,  போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

திருப்பூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குநர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திருப்பூர் குமரன் வீதியிலுள்ள கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற இருந்தது.

இந்நிலையில், வேட்புமனு தாக்கலுக்கு அதிமுகவினரை மட்டுமே அனுமதிப்பதாக கூறி, மாற்று கட்சியினர் தேர்தல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை தடுக்க முயன்ற போலீசாருக்கும் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது  காவல்துறையினர் தடியடி பிரயோகம் செய்தனர்.

இதனை தொடர்ந்து திருப்பூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குநர் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.