சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்யும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மாநிலம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பல கூட்டுறவு சங்க தேர்தலுக்கு எதிராக வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த கூட்டுறவு சங்க தேர்தல் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் தேர்வான நபர்களின் பதவிக்காலம் 2023 ஆண்டு வரை உள்ள நிலையில், அதனை ரத்து செய்வதற்கான மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
பல்வேறு மாவட்டங்களில் நகைக்கடன் வழங்கப்பட்டதில்,கூட்டுறவு சங்க தேர்தலில் தேர்வான நபர்கள் மூலம் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்,கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில்நிலையில்,இந்த தேர்தலை ரத்து செய்வதற்கான மசோதா இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனால், தேர்வு செய்யப்பட்ட20ஆயிரம் பேர் பதவி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.