திருப்பத்தூர்: திமுகவினருக்கு வாய்ப்புகள் வழங்கும் வகையில் உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக, திமுகவினரிடையே கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது. இந்த நிலையில், திருருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் தேர்தல் முடிந்து மூன்று நாட்களில் கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படும், கூட்டுறவு சர்க்கரை ஆலை, ஆவின் சங்கங்களும் கலைக்கப்படும்.
கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட 32 வாரியங்களும் கலைக்கப்பட்டு உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு கிடைக்காத திமுகவினர்களுக்கு பதவிகள் வழங்கப்படும் என்று கூறினார். அமைச்சர் துரைமுருகனின் அதிரடி பேச்சு பரபரபபை ஏற்படுத்தி உள்ளது.
சீட் கிடைக்காதவர்களுக்கு கூட்டுறவு சங்கங்களிலும் , வாரியங்களிலும் பதவிகள் கொடுக்கப்படும் என்று துரைமுருகன் சொல்லியிருப்பது திமுக நிர்வாகிகளிடம் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.