டில்லி:

மிழகத்தில் நடைபெற்று வரும் கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான வழக்கில், இந்த மாதத்திற்குள் (மே) தீர்ப்பு வழங்க உச்சநீதி மன்றம் மதுரை உயர்நீதி மன்றத்திற்கு உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்த மதுரை உயர்நீதி மன்றம் தடை விதித்திருந்த நிலையில், தடை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில், தேர்தலை நடத்த உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கியும், உயர்நீதிமன்றம் மதுரை கிளை விதித்த தடையை நீக்கியும் கடந்த மாதம் 20ந்தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், அது தொடர்பான மேல்விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது,  கூட்டுறவு தேர்தல் வழக்கை உயர்நீதிமன்றமே விசாரித்து தீர்ப்பு தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த விசாரணையை முடித்து,  மே இறுதிக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும்  உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஆனால்,  கூட்டுறவு தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு விதித்த தடை தொடரும் என்றும்  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.