சென்னை:
சென்னை மெட்ரோ ரயிலின் வடசென்னைக்கு பாதை அமைக்கும் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் ரெடியாகும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
தற்போது வண்ணாரப்போட்டை வரை ரயில் சேவைகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கிருந்து விம்கோநகர் வரையிலான 9 கி.மீ நீளம் சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டு, மற்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும் என ஏற்கனவே திட்டமிட்டு அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கு மற்றும் பல்வேறு பிரச்சினைகளால், தாமதமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கூறிய மெட்ரோ ரயில் நிர்வாகி அதிகாரி, கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத் தால் உலகளாவிய லாக்டவுன் காரணமாக, மெட்ரோ ரயிலுக்கு தேவையான மின் மற்றும் மின்னணு பாகங்களை சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிக்கியுள்ளது. தற்போது, அவைகளை இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையில், தற்போது, ஊரடங்கில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளால் 50% தொழிலாளர்களு டன் அதாவது 1,200 பேர்களைக் கொண்டு மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் பணியை முடிக்க திட்டமிட்டு இருக்கிறோம் என்றார்.
கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் மெட்ரோ ரயில்பணிகள் நிறுத்தப்பட்டதால், சுமார் 80 சதவிகித தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதாகவும், ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அழைத்து வருவது குறித்து யோசித்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
சென்னை சென்ட்ரல் முதல் விம்கோ நகர் வரையிலான வடசென்னை மெட்ரோ ரயில் நிலையில், 3 நிலத்தடி ரயில் நிலையம் உள்பட மொத்தம் 9 ரயில் நிலையங்களைக் கொண்டது. இந்த ரயில் போக்குவரத்து சேவைக்கு வரும் நிலையில், வடசென்னை மக்கள் சென்ட்ரல் ஸ்டேஷன், எக்மோர் நிலையம், சிஎம்பிடி பஸ் ஸ்டாண்ட் மற்றும் விமான நிலையம் போன்ற போக்குவரத்து மையங்களுக்கு எளிதாக செல்ல முடியும்.